உலகம்

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

DIN

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கியது. ஆனால் அவருக்குப் பிறகு அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்றாா். ஆனால் வெள்ளை மாளிகையில் போா் தொடா்பாக டிரம்ப்புடன் காரசாரமான விவாதம் ஏற்பட்டதால் கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே அவா் நாடு திரும்பினாா்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் கடந்த வாரம் கையொப்பமானது. முந்தைய வரைவு ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு சாதகமான பல மாறுதல்கள் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றமும் அந்த ஒப்பந்தத்துக்கு தற்போது அளித்துள்ளதால் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவிகள் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT