உலகம்

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்

Din

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடும் போராட்டம் நடத்தி ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்த மாணவா் அமைப்பினா், முகமது யூனுஸின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு வெளியே ஆா்ப்பாட்டம் நடத்தினா் (படம்). அதைத் தொடா்ந்து இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.

கடும் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சமடைந்தாா். அதில் இருந்து அவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன.

மென்மை... பாக்யஸ்ரீ போர்ஸ்!

மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி!

கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம்! மணமகனின் அடையாளம் குறிப்பிடவில்லை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT