விபத்துக்குள்ளான பேருந்து.  STR
உலகம்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இலங்கையில் 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.

DIN

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.

இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு 75 பயணிகளை ஏற்றிச் சென்ற மாநில போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.

நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மேலும் 30க்கும் மேற்பட்ட பயணிகளும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மத்திய மாகாணத்தின் மலைப்பாங்கான கோட்மலே பகுதியில் ஓட்டுநர் பேருந்தை இடதுபுறம் திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT