காஸா பகுதி.  கோப்புப்படம்.
உலகம்

காஸா: இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 24 மணி நேரத்தில் 23 பேர் பலி

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

DIN

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 23 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாவில் கூடாரத்தின் மீது சனிக்கிழமை மாலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு பாலஸ்தீனர்கள் பலியானார்கள்.

மேலும் பலர் காயமடைந்தனர். முன்னதாக, சனிக்கிழமை காலை காஸா நகரத்தின் சப்ரா பகுதியில் உள்ள கூடாரத்தில் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் ஐந்து பேர் பலியானதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்தது.

தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் ஒரு கூடாரத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தால் குண்டுவீசப்பட்டனர் என்று குடும்ப உறுப்பினர் ஒமர் அபு அல்-காஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அன்னையர் நாள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

மேலும் இந்த தாக்குதல்கள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டதாக குழந்தைகளின் தாத்தா கூறினார்.

அதே நேரத்தில், காஸா நகரின் துஃபா பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு பேர் பலியாகினர். இத்துடன் கடந்த 24 மணி நேரத்தில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 23 பாலஸ்தீனர்கள் பலியானதாகவும், 124 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT