மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோது எதிரே வந்த பயணிகள் பேருந்துடன் மோதி, பின்னா் வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். இது தவிர, விபத்தில் காயமடைந்த ஏராளமானவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
அண்மைக் காலமாக, மெக்ஸிகோ நெடுஞ்சாலைகளில் மோசமான சாலை விபத்துகள் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.