கனடா பிரதமர் மார்க் கார்னி  படம்| @MarkJCarney
உலகம்

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்: கனடா பிரதமர் இரங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் - கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு...

DIN

இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று(மே 18) இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ போரில் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் இணைந்து ஈழத் தமிழா்களின் வாழ்விடங்கள், பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழித்தன. இறுதியாக, 2009 மே 17, 18 ,19 ஆம் தேதிகளில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இது குறித்து கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் நிகழ்ந்த ஆயுதச் சண்டை முடிவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ் இனப் படுகொலை நாளான இன்றைய நாளில், நாம் பறிகொடுத்த உயிர்களையும், பிரிந்தொழிந்த குடும்பங்களையும், சிதைக்கப்பட்ட சமூகங்களையும், இந்நாள் வரை மாயமாகி கண்டுபிடிக்க முடியாது போன நபர்களையும் நினைவுகூருகிறோம்.

கனடாவில் தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் தங்களுடன் தாங்கள் இன்னுயிராய் நேசித்தவர்களைப் பற்றிய நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றனர்”.

படுகொலைகளுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க செய்வதிலும் இவ்விவகாரத்தில் உண்மையும் நீதியும் கிடைக்கச் செய்வதற்கும் சர்வதேச அளவிலான சுதந்திரமான முயற்சிகள் நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

SCROLL FOR NEXT