Samsung
உலகம்

ஐபோன் மட்டுமல்ல; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து பொருள்களுக்கும் வரி என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

DIN

ஐபோன்களுக்கு வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருள்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, டிரம்ப் தெரிவித்ததாவது, வரிவிதிப்பு என்பது ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இது நியாமமாக இருக்காது. சாம்சங் போன்ற எந்தவொரு நிறுவனத்துக்கும் இது பொருந்தும்.

அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்தால் மட்டுமே அவர்களுக்கு வரி கிடையாது. இது, அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையானது ஜூன் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் முற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.

அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்துக்கும் அதே கோரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT