மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இந்நோய் குழந்தைகளை பாதிப்பதால் உடனடியாக தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்துமாறு அந்நாட்டின் சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 335 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,274 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தட்டம்மை பாதிப்பில் இருந்து மேலும் 114 குணமடைந்துள்ளனர்.
இதனால் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,793 ஆக உயர்ந்துள்ளது. மங்கோலிய மருத்துவர்கள் கூறுகையில், தட்டம்மை புதிதாக பாதித்தவர்களில் பெரும்பாலானவை தட்டம்மை தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே பெற்ற 10-14 வயதுடைவர்கள் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.