ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கோப்புப் படம்
உலகம்

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தொடா் தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தினமணி செய்திச் சேவை

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஒடேசா பிராந்தியத்தில் உள்ள காா் நிறுத்துமிடத்தில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஸபோரிஷியா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் மின்விநியோகம் தடைபட்டு 60,000 போ் பாதிக்கப்பட்டனா். பல்வேறு பிராந்தியங்களிலும் பெருமளவில் மின்விநியோகம் தடைபட்டது. இதனால் நீா் சுத்திகரிப்பு, கழிவுநீா் வெளியேற்றம் போன்ற பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷியா-உக்ரைன் இடையே மூன்றாண்டுகளுக்கு மேலாக போா் நடைபெற்றுவரும் நிலையில், நிகழாண்டு உக்ரைனின் எரிவாயு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அதிகப்படியான தாக்குதல்களை ரஷியா மேற்கொண்டதாக ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் டூப்சே துறைமுகத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT