ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் மீண்டும் தள்ளிவைத்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜிடிஏ 6-க்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, 2026 மே மாதத்தில் வெளியிடப்படுவதாய் இருந்த ஜிடிஏ 6, அடுத்தாண்டு நவம்பர் 19 ஆம் தேதியில்தான் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பில், மேம்பட்ட மற்றும் தரமான வெளியீட்டுக்காக தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஜிடிஏ 6 வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தாலும், அதன் ரசிகர்கள் ஆண்டுதோறும் காத்துக் கொண்டுதான் இருந்தனர். இந்த நிலையில், இந்தாண்டு இல்லை’ அடுத்தாண்டு மே மாதம்தான் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போதோ அடுத்த நவம்பர் மாதம்தான் என்று அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இதையும் படிக்க: இரைச்சலில் இருந்து தப்பிக்கவே துபை சென்றேன் - நடிகர் அஜித் விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.