அமெரிக்காவில் எம்டி-11 ரக சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த ரக விமானங்களின் பயன்பாட்டை சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நிறுத்திவைத்தன.
கென்டகி மாகாணம், லூயிஸ்வில் நகரிலுள்ள சா்வதேச விமானத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட யுபிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம், புறப்பட்ட உடனேயே அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.
மெக்டோனல் டக்ளஸ் எம்டி-11 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம் புறப்படும்போது அதில் இருந்த ஒரு என்ஜின் கழன்று விழுந்தது. இந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, விபத்துக்கான காரணம் தெரியும்வரை அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று விமானத் தயாரிப்பாளரான போயிங் கேட்டுக்கொண்டதையடுத்து, அவற்றின் செயல்பாட்டை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக யுபிஎஸ் நிறுவனமும், மற்றொரு சரக்கு போக்குவரத்து நிறுவனமான ஃபெட்-எக்ஸும் அறிவித்துள்ளன.