டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பு உலகையே அசரவைக்கும் அளவுக்கு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் நிறுவனரும் எக்ஸ் (டிவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடமிருந்து ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத் தொகுப்பைப் பெற்றுள்ளார்.
உலக நாடுகளில் 170 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியே ஒரு டிரில்லியன் டாலரைவிட குறைவுதான்.
ஒரு டிரில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 88.6 லட்சம் கோடி. இருப்பினும், எலான் மஸ்க் சில இலக்குகளை எட்டினால்தான் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் என்று டெஸ்லா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத்தை, அவருக்கு அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்து வழங்கப்படுகிறது.
இதன்படி, எலான் மஸ்க்கின் ஆண்டு ஊதியமாக ரூ. 8.6 லட்சம் கோடி வழங்கப்படும். அதாவது, மாத ஊதியமாகக் கொண்டால் - ரூ. 69,000 கோடி, வார ஊதியமாகக் கொண்டால் - ரூ. 17,250 கோடி, நாள் ஊதியமாகக் கொண்டால் - ரூ. 2,400 கோடி எனலாம். இன்னும் சொல்வதென்றால், அவருக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 1.6 கோடியாகவும், ஒரு நொடிக்கு ரூ. 2.6 லட்சமும் சம்பளமாக வழங்கப்படலாம்.
இந்த ஒரு டிரில்லியன் டாலர் சம்பளத்தை வைத்து, அவரால் சில நாடுகளையே வாங்கிவிட முடியும்.
இருப்பினும், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லாவின் ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பிலிருந்து 8.5 டிரில்லியன் டாலராக அதிகரித்தல், 2 கோடி மின்சார வாகனங்கள், சுமார் 10 லட்சம் ரோபோடாக்சிகள், 10 லட்சம் ஆப்டிமஸ் ஹ்யூமனாய்டு ரோபோக்கள் உள்ளிட்ட இலக்குகளை எலான் மஸ்குக்கு டெஸ்லா விதித்துள்ளது.
இதையும் படிக்க: துபையில் ஷாருக்கான் பெயரில் கட்டப்படும் பிரமாண்ட கட்டடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.