சாண்டியாகோ: தென் அமெரிக்காவிலுள்ள சிலியில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(நவ. 16) நடைபெறுகிறது.
இத்தேர்தலில் கம்யூனிஸ்ட் ஆதரவாளரும் முன்னாள் தொழிலாளர் அமைச்சருமான ஜென்னெட் ஜாரா(51) மற்றும் வலதுசாரி வேட்பாளரான ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட்(59) ஆகிய இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களுடன் சேர்த்து மொத்தம் 8 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
சிலி அதிபர் தேர்தலில் சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச் செலுத்துகின்றனர். சிலி நேரப்படி ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு(இந்திய நேரப்படி நவ. 17 அதிகாலை 2.30 மணி) முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.