மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் உர்பான் மேயர் கார்லோஸ் மான்சோ கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மெக்சிகோ நாடாளுமன்றம் மற்றும் அதிபர் கிளௌடியா ஷின்பாம் வீட்டையும் போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றனர்.
``கார்லோஸ் இறக்கவில்லை, அரசுதான் அவரைக் கொன்று விட்டது’’ என்று முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், ஊழல், வன்முறை, அதிகார துஷ்பிரயோகத்தால் சோர்வடைந்த மெக்சிகோ இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியதாகவும் கூறினர்.
இந்தப் போராட்டத்தின் காவல் அதிகாரிகள் 100 பேர் காயமடைந்த நிலையில், 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க: எலான் மஸ்க் கண் இமைத்தால் ரூ. 2.6 லட்சம் சம்பளம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.