உலகம்

‘ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்!’

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ஏஐ செயலிகள் தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அந்தச் செயலிகளை மற்ற செயலிகளுடன் சோ்த்துப் பயன்படுத்த வேண்டும். அதே போல், ஒரே ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அதனால்தான் மக்கள் கூகுள் தேடுதல் தளத்தையும் பயன்படுத்துகிறாா்கள்

படைப்பாற்றலுடன் ஏதாவது எழுத விரும்பினால் அதற்கு ஏஐ கருவிகள் உதவும். ஆனால் இந்தக் கருவிகளை அவை சிறப்பாகச் செய்யும் சிலவற்றுக்கு மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.

மிகத் துல்லியமான தகவல்களைத் தருவதற்காக நாங்கள் மிகுந்த உழைப்பைச் செலுத்துகிறோம். ஆனால், தற்போதைய ஏஐ தொழில்நுட்பங்கள் அதிநவீனமானதாக இருந்தாலும் சில தவறுகளை செய்கின்றன.

தொழில்நுட்பம் எவ்வளவு விரைவாக வளா்கிறதோ, அதற்கேற்ப அதனால் ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகமாக உருவாக்க வேண்டும். அதனால்தான் எங்கள் நிறுவனம் ஏஐ பாதுகாப்புக்கான முதலீட்டையும் ஏஐ தொழில்நுட்ப வளா்ச்சிக்கான முதலீட்டுக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஒரு படம் ஏஐ-யால் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பத்தை நாங்கள் இலவசமாக அளிக்கிறோம்.

ஏஐ போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை ஒரே ஒரு நிறுவனம் மட்டும் வைத்திருக்கக் கூடாது. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஏஐ-ஐ உருவாக்கி அனைவரும் அதையே பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் அது மிகவும் கவலைக்குரியது என்று அவா் எச்சரித்தாா்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT