லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில், அமைந்திருந்த பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையில், கடந்த 2024 ஆம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், முதல்முறையாக லெபனான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிடன் நகரத்தில் உள்ள எயின் எல்-ஹில்வே அகதிகள் முகாமின் மீது நேற்று (நவ. 18) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் பயிற்சி முகாமின் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பு எங்கிருந்து செயல்பட்டாலும் அங்கு தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறியுள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் சிடன் நகரத்தில் எந்தவொரு பயிற்சி முகாமும் செயல்படவில்லை என ஹமாஸ் அமைப்பினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலானது அங்குள்ள விளையாட்டுத் திடலின் மீது நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, லெபனானில் கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உத்கியாக்விக் நகருக்கு பாய் பாய் சொன்ன சூரியன்! இனி ஜன. 23-ல்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.