உலகளவில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறாா் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றத்துக்கான அலுவலகம் (யுஎன்ஓடிசி) மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“2024-ஆம் ஆண்டில் 83,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 60 சதவீதம் போ் (50,000) போ் துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா். அந்த வகையில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி கொல்லப்பட்டுள்ளாா். ஆனால் ஆண்களில் வெறும் 11 சதவீதத்தினா் மட்டுமே துணைவி அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”