முகப்பு
உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்: ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்!

ஐ.நா. விசாரணை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.முரளீதா் நியமனம்...

Updated On : 28 நவம்பர், 2025 at 7:14 PM
பகிர்:

இஸ்ரேல், அந்நாடு ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீன நிலப்பகுதி தொடா்பான ஐ.நா.வின் சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையத் தலைவராக ஒடிஸா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்களை விசாரித்தல், அதற்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து மனித உரிமை மீறல்களுக்கு அவா்களைப் பொறுப்பேற்க வைத்தல், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்தல் ஆகியவை அந்த ஆணையத்தின் நோக்கமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தில் 3 உறுப்பினா்கள் இடம்பெறுவா். அந்த ஆணையத்தின் தலைவராக பிரேஸில் சட்ட அறிஞா் பாலோ சொ்ஜியோ பின்ஹெரோ பொறுப்பு வகித்த நிலையில், தற்போது தலைவராக எஸ்.முரளீதா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →