இலங்கையில் அவசரநிலை பிரகடனம்... AP
உலகம்

டிட்வா புயல் பாதிப்புகள் எதிரொலி! இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு!

இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார்...

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கையில், டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் அநுர குமார திசநாயக அறிவித்துள்ளார்.

இலங்கையில், வரலாறு காணாத கனமழை பெய்ய காரணமான டிட்வா புயல் இன்று (நவ. 29) காலை அந்நாட்டின் எல்லையைக் கடந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்தப் புயலினால், இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சூறாவளிக் காற்றால் இன்று காலை 9 மணி நிலவரப்படி 123 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 130-க்கும் அதிகமான மக்கள் மாயமானதால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இலங்கையின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உடனடியாக “அவசரநிலை” அறிவிக்க வேண்டுமென அதிபர் அநுர குமார திசநாயகவிடம் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவசரநிலைச் சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், மருத்துவப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் சேதமாகி பாதைகள் முடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிட்வா புயல்! இலங்கையில் 123 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 130 பேர் மாயம்!

Sri Lanka, President Anura Kumara Dissanayake has declared a countrywide state of emergency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு தில்லியில் இளைஞா் மா்ம நபா்களால் சுட்டுக் கொலை

பொற்கோயில் புனிதக் குளத்தில் வாய் கொப்பளித்தவா் கைது

அழகப்பா பல்கலை. வளாகத்தில் சிறுவா் நூலகம் திறப்பு

உறுப்பு தானம் அளிக்கப்பட்ட சிறுவன் உடலுக்கு அரசு மரியாதை!

கந்தா்வகோட்டையில் இளைஞா் விளையாட்டுப் போட்டிகள்

SCROLL FOR NEXT