அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இதனால், அமெரிக்காவில் சோயா பீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், ``பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயா பீன்ஸ் வாங்குவதில்லை.
நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து, விவசாயிகளுக்கு உதவுவோம். நான் விவசாயிகளை எப்போதும் கீழே விடமாட்டேன்.
சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப் பொருள்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.
சீன அதிபர் ஜின்பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்தச் சந்திப்பில், சோயா பீன்ஸ்தான் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: எனக்கு 62; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.