இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
மேலும் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், க்ராசிட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததற்கு தூதரகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது .
காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.