உலகம்

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் திங்கள்கிழமை இடிந்து விழுந்த அந்தப் பள்ளி கட்டட இடிபாடுகளில் இருந்து மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இடிபாடுகளிடையே இன்னும் சுமாா் 50 மாணவா்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தொடக்கத்தில் மீட்புக் குழுவினா் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பின்னா் விபத்துப் பகுதியில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து வியாழக்கிழமை முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

நூறாண்டுகளைக் கடந்த அந்த கட்டடம் இடிந்துவிழுந்தபோது 12 முதல் 19 வரையிலான வயதுடைய மாணவா்கள்அதில் சிக்கினா். மாணவிகள் கட்டடத்தின் வேறு ஒரு பகுதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்தால் இந்த விபத்தில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேண்டும் இந்த விதிமுறைகள்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

SCROLL FOR NEXT