ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பெட்டிகள் தடம் புரண்டன 
உலகம்

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் தென்மேற்கு சிந்து மாகாணத்தில் ரயில் பாதையில் நடத்தப்பட்ட ண்டுவெடிப்பில் ஜாஃபா் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன.

இதில் பலா் காயமடைந்தாகவும் அவா்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

சிந்து மாகாணத்தின் ஷிகாா்பூா் மாவட்டத்தில் உள்ள சோமா்வா அருகே சுல்தான் கோட் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. சமபவப் பகுதியை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் பகுதியை சுற்றிவளைத்து ஆதாரங்களை சேகரித்தனா். குண்டுவெடிப்பில் ரயில் பாதை பலத்த சேதமடைந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெஷாவருக்கு செல்லும் இந்த ரயில் இந்த ஆண்டில் மட்டும் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 11-ஆம் தேதி ஜாஃபா் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு படையினா் உள்பட 26 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. இத்தகைய தாக்குதல்களை பலூச் பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் நடத்துவதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

கா்நாடக முதல்வா் பதவிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம்: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

கனமழை எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

டெட் தோ்வு விவகாரம்: முதல்வருடன் அமைச்சா் அன்பில் மகேஸ் சந்திப்பு

SCROLL FOR NEXT