உலகம்

உக்ரைன் தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் கொ்சான் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் கொ்சான் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த பிராந்தியத்தில் ரஷியாவால் நியமிக்கப்பட்ட ஆளுநா் விளாதிமீா் சால்டோ கூறியதாவது:

கொ்சான் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவம் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இது தவிர, பிராந்தியத்தின் மற்றொரு பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவா் காயமடைந்தாா் என்றாா் அவா்.

ரஷியாவின் தினசரி தாக்குதல்களுக்கு பதிலடியாக, அந்த நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் லட்சக்கணக்கானோா் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனா். இந்தச் சூழலில், உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 போ் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 2014-ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கிரீமியா தீபகற்பமும் அடங்கும்.

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

SCROLL FOR NEXT