கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச் பகுதியில் வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடந்த சனிக்கிழமை(அக். 11) சாலையில் இருந்த மரங்கள் மற்றும் கட்டடங்கள் மீது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், சாலையில் நடந்து சென்ற மூன்று பாதசாரிகள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னதாக, கடந்த அக். 6-இல் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒன்று கலிஃபோர்னியாவில் நெடுஞ்சாலையில் விழுந்து சேதமடைந்து விபத்துக்குள்ளான நிலையில், மீண்டும் அங்கு அதேபோன்றதொரு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.