இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் கடற்கரையில் டிரம்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரின் முகத்தை பதாகையில் அச்சிட்டு, தங்கள் வீட்டிற்கு வரவேற்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டுக் கொடியை பிரதிபலிக்கும் வகையிலான பதாகையின் தொடக்கத்தில் டிரம்ப்பின் முகத்தை பதித்து நன்றி எனக் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்துவதற்காக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இன்று கையெழுத்தாகவுள்ளது.
எகிப்தில் நடைபெறவுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைவர் அந்தோனியோ குட்டரெஸ் உள்பட 20 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இங்கு செல்வதற்கு முன்பாக இஸ்ரேலில் 4 மணிநேரம் பயணம் மேற்கொள்கிறார் அதிபர் டிரம்ப்.
இதற்காக டெல் அவிவ் கடற்கரை நகரைத் தாண்டி விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் டிரம்ப் செல்லும்போது அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல் அவிக் கடற்கரையில் மிகப்பெரிய பதாகை வைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் முகம் பொறிக்கப்பட்டுள்ள அந்த பதாகையில், நன்றி என்றும் வீட்டிற்கு தங்களை வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.