இந்தியா - பாக். உறவை இணைப்போம் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) சா்வதேச அமைதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு உலகத் தலைவா்கள் பங்கேற்கும் கலந்துகொள்கின்றனர். இந்த நிலையில், எகிப்துக்கு புறப்படும் முன் இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இன்று(அக். 13) டிரம்ப் ஆற்றிய உரை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
டிரம்ப் பேசியதாவது: “நவீன இஸ்ரேல் நிறுவப்பட்டதன் முதல் நாளிலிருந்தே நாங்கள்(அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்), எலும்பும் சதையுமாக இணக்கமாகவே எப்போதும் இருந்து வருகிறோம். செய்ய முடியாத விஷயங்களை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம்.
இஸ்ரேலை எகிப்துடன், சவூதி அரேபியாவை கத்தாருடன், இந்தியாவை பாகிஸ்தானுடன், துருக்கியை ஜோர்டானுடன், ஐக்கிய அரபு அமீரகத்தை ஓமனுடன், அர்மீனியாவை அஸெர்பைஜானுடன், டெல் அவிவை துபையுடன், ஹைஃபாவை பெய்ரூட்டுடன் இணைக்க நாங்கள் பாலமாக இருப்போம்...” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.