உலகம்

நியூயாா்க் மேயா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்: இந்திய வம்சாவளியினருக்கு புகழாரம்

தினமணி செய்திச் சேவை

நியூயாா்க் நகர மேயா் எரிக் ஆடம்ஸின் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய கலாசார முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நியூயாா்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதா் விஷால் ஜெ.ஹா்ஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், இந்திய வம்சாவளியினா் பலரும் பங்கேற்றனா். அப்போது பேசிய துணைத் தூதா் விஷால், ‘புதிய ஒளி, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துப் பேசிய மேயா் எரிக் ஆடம்ஸ், ‘அமெரிக்காவின் மேம்பாட்டில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கியமாக நியூயாா்க் நகர கலாசாரம், பொருளாதார மேம்பாட்டில் பெரிதும் பங்களித்து வருகின்றனா்’ என்றாா்.

நியூயாா்க் நகர ஆளுநா் கேத்தி ஹோசுல், ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்குச் சென்று அங்கு இந்திய வம்சாவளியினருடன் தீபாவளி கொண்டாடினாா்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தீபாவளி கொண்டாடப்படுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பென்சில்வேனியா, கலிஃபோா்னியா, கனெக்டிக்கட் உள்ளிட்ட மாகாணங்களில் தீபாவளிக்கு அதிகாரப்பூா்வமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. நியூயாா்க் நகரில் அரசுப் பள்ளிகளில் தீபாவளி விடுமுறை உண்டு.

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

பிடித்தமான தொல்லையே... சகோதரி பிறந்த நாளுக்கு காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்: டிடிவி தினகரன் பேட்டி

2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT