இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸை வழிநடத்தியவர் என்று அமெரிக்காவில் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஹமாஸ் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் என்பவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அவரை அமெரிக்க விசாரணைக் குழு கைது செய்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தலை விசாரிக்க அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2023 அக்டோபர் 7 ஆம் தேதியில் இஸ்ரேல் மீதான ஹ்மாஸின் தாக்குதலின்போது, ஹமாஸ் படையில் இருந்த மஹ்மூத், அமெரிக்காவில் தங்கியிருப்பது தெரிய வந்தது. மேலும், அமெரிக்காவில் விசா பெற பொய்கூறி, சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவின் விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் நிரந்தர குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அவர் அமெரிக்க விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், விசா மோசடி மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி, அவரது பெயர் மற்றும் வயதிலேயே மற்றொருவர் இருப்பதாகவும், அவரும் கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உக்ரைனும் ரஷியாவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்! - டிரம்ப் வலியுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.