பிரான்சிலுள்ள உலகப் புகழ்பெற்ற பாரிசிலுள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது. இந்தத் தகவலை பிரெஞ்சு கலாசாரத் துறை அமைச்சர் ரச்சிதா தட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘லுவெர் அருங்காட்சியகத்தில் இன்று(அக். 19) காலை திருட்டு நடந்துள்ளது. இது குறித்து காவல் துறையும் அருங்காட்சியக ஊழியர்களும் நானும் சம்பவ இடத்திலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகமே வியந்து பார்க்கும் ‘மோன லிசா’, ‘வீனஸ் டே மிலோ’ உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்படைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றுள்ள திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், திருடுபோன பொருள்கள் என்னென்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நகைகள் சில மாயமாகியிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்கள் அருங்காட்சியகத்துக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில், திருட்டு காரணமாக இன்று(அக். 19) அருங்காட்சியத்துக்குச் சென்று பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.