ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64) அந்நாட்டின் கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.
அதன்பின்னர், லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி, உள்கட்சி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சனே தகைச்சியை, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 237 வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜப்பான் அரசரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, ஜப்பானின் 104-வது பிரதமராகவும் முதல் பெண் பிரதமராகவும் சனே தகைச்சி பதவியேற்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.