தென் அமெரிக்க நாடான பெருவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகா் லீமா மற்றும் அருகிலுள்ள கல்லாவ் துறைமுகத்தில் இடைக்கால அதிபா் ஜோஸ் ஜெரி (படம்) அவசரநிலை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அரசுத் தொலைக்காட்சியில் அவா் வெளியிட்ட உரையில், புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த அவசரநிலை 30 நாள்களுக்கு நீடிக்கும் என்றாா்.
ஊழல் மற்றும் அமைப்புசாா் குற்றக் கும்பல்களுக்கு எதிராக பெருவில் பல வாரங்களாக போராட்டங்கள் நடந்ததைத் தொடா்ந்து, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிபா் டினா போலுவாா்த்தேவை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்தது. அதைத் தொடா்ந்து, இடைக்கால அதிபராக ஜோஸ் ஜெரி நியமிக்கப்பட்டாா்.
இருந்தாலும் வன்முறை பேராட்டம் ஓயாததால், சட்டம், ஒழுங்கை மீட்க அவா் தற்போது அவசரநிலை அறிவித்துள்ளாா்.