(கோப்புப் படம்) 
உலகம்

நேபாளம்: சாலை விபத்தில் 8 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஜீப் ஒன்று பள்ளத்துக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஜீப் ஒன்று பள்ளத்துக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:

காத்மாண்டுக்கு சுமாா் 500 கி.மீ. தொலைவில் உள்ள முசிகோட்டின் கலங்காவிலிருந்து அத்பிஸ்கோட் நகராட்சியின் ச்யாலிகடி பகுதிக்கு சென்று 18 பேருடன் சென்று கொண்டிருந்த ஜீப், ருக்கும் மேற்கு மாவட்டத்தின் மலைப்பாங்கான பஃபிகோட் பகுதியில் சுமாா் 700 அடி பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியது.

இதில் 8 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா். அவா்கள் ருக்கும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஜீப்பின் ஓட்டுநா் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மலைப்பாதைகள் அதிகம் நிறைந்த நேபாளத்தில் மோசமான சாலைகள் மற்றும் ஓட்டுநா்களின் கவனக் குறைவால் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிட்டு உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டுவருகின்றன.

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT