அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு தென் கொரிய அரசு தங்க கிரீடம் பரிசளித்து சிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வணிகப் பேச்சுவார்த்தைகளுக்காக ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவுக்கும் சென்ற நிலையில், அவருக்கு அந்நாட்டு உயரிய விருதுடன், தங்க கிரீடமும் பரிசளிக்கப்பட்டது.
வணிகப் பேச்சுவார்த்தைகளுக்காக தென் கொரியா சென்ற டிரம்ப்புக்கு, அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் முகுங்வா வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துபவர் என்று சிறப்பிக்கப்பட்டு, டிரம்ப்புக்கு தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் விருது வழங்கினார்.
இதையும் படிக்க: 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!
South Korea to award Us President Trump its highest medal, gift him a golden crown
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.