FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

உலக அமைதி மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிக முக்கியம்: பிரதமர் மோடி பேச்சு

Updated On : 2 பிப்ரவரி 2026, 11:45 pm IST
பிரதமர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா மீதான வரியைக் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், எனது அன்பு நண்பர் டிரம்ப்புடன் இன்று உரையாடினேன். இனிமேல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த அற்புதமான அறிவிப்புக்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப்புக்கு மிகப்பெரிய நன்றி.

Advertisement

Advertisement

இரு பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, மக்களுக்கு பெரிதும் நன்மை அளிக்கும்.

உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் டிரம்ப்பின் தலைமை முக்கியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.

நமது கூட்டணியை முன்னெப்போதும் இல்லாத அளவில், உயரத்துக்குக் கொண்டுசெல்ல அவருடம் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட நிலையில், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, விவசாயம், நிலக்கரி உள்பட பல பொருள்களை வாங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், வெனிசுவேலாவிருந்தும் அதிக எண்ணெய் வாங்கவும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாகவும் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Big thanks to Trump for this wonderful announcement, says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments