FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்ஸ்டாவில் ஒரே இரவில் 10 லட்சம் பேர்... இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி விடியோ குறித்து...

Updated On : 25 ஜூலை 2026, 9:50 am IST
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செல்ஃபி விடியோ - Insta | PM Modi
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு குறித்து வெளியிடப்பட்ட விடியோவை வரவேற்ற இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி, இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி விடியோ வியாழக்கிழமை (ஜூலை 23) வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தான் வெளியிட்ட விடியோவுக்கு பலரும் வரவேற்பளித்ததற்கு நன்றிகூறி, மீண்டும் வெள்ளிக்கிழமை இரவில் (ஜூலை 24) விடியோ வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட விடியோவுக்கான வரவேற்பு குறித்து பேசியிருப்பதாவது, நன்றி, நண்பர்களே. நேற்றிரவு உங்களுடன் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் பதிவிட்ட காணொலிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், உங்களின் ஆலோசனைகளுக்கும் நன்றி. உங்களின் அன்பும் ஆதரவும் தொடரும் என்றும், நமது பிணைப்பு மேலும் வலுவாகும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், இளைஞர்கள் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருப்பதால், மத்திய அமைச்சர்களும் இன்ஸ்டாகிராமில் இணையுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள விடியோவுக்கு ஒரே இரவில் 10.4 கோடி பார்வைகள், 70.4 லட்சம் லைக்குகள் மட்டுமின்றி, ஒரே இரவில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். அதேபோல, வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ 33.3 கோடி பார்வைகள் பெற்றுள்ளது.

summary

PM Modi 'thanks friends' in Instagram reel after paper leak selfie video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments