பாகிஸ்தானில், 18 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவின் சில்தான் மலைப் பகுதி மற்றும் கெச் மாவட்டத்தில், நேற்று (அக். 29) இரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான இருவேறு நடவடிக்கைகளில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்; அப்போது, இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 18 பயங்கரவாதிகளை வெற்றிகரமாகச் சுட்டுக்கொன்றதாகக் கூறி, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.