சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு X
உலகம்

வர்த்தகப் போர் முடிவுக்கு வருமா? அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

தென் கொரியாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

தென் கொரியாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்தி உத்தரவிட்டார். ஆனால், தற்போது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தென்கொரியாவில் புசான் நகரில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசி வருகிறார்.

இது 'வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக டிரம்ப் கூறியுள்ள நிலயில், 'உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று ஜின்பிங் கூறியுள்ளார்.

சீன தலைவர் ஸி ஜின்பிங்கை "கடுமையான பேரம் பேசுபவர்" என்றும் கூறிய டிரம்ப் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் இந்த சந்திப்பின் மூலமாக முடிவுக்கு வரும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

காந்தா படத்தின் புதிய பாடல் வெளியீடு!

பேரவைத் தேர்தல் தோல்விக்கு இப்போதே காரணத்தை அறிவித்து விட்டது திமுக: சிறப்பு திருத்தம் குறித்து இபிஎஸ்

விக்ரம் - 63 திரைப்படம் அறிவிப்பு!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்!

SCROLL FOR NEXT