பாகிஸ்தானின் சா்ச்சைக்குரிய மதநிந்தனை தடைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முதல் முஸ்லிம் பெண்ணான அனிகா அடீக்கை அந்த வழக்கில் இருந்து லாகூா் உயா் நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 2020-இல் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளை கைப்பேசி மூலம் ஹஸ்னத் ஃபரூக் என்பவருக்கு அனிகா அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், வழக்கில் போதிய நடைபமுறைகள் பின்படுத்தப்படாததால் தண்டனையை ரத்து செய்வதாக லாகூா் உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.