பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு காவல்துறையை மேற்கொள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்ததாவது:
எங்கா மாகாணம், குகாஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதி வீடுகள் புதையுண்டன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த பேரிடா் ஏற்பட்டது.
விபத்துப் பகுதியில் இருந்து 21 உடல்கள் மீட்கப்பட்டன என்று ஊடகங்கள் தெரிவித்தன.
எங்கா மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 670 போ் நிலச்சரிவில் உயிரிழந்ததாக ஐ.நா. கூறியது. இருந்தாலும் பப்புவா கினியா அரசு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகம் என்று தெரிவித்துள்ளது.