செட்ரோ லியோனாா்டோ புா்பா 
உலகம்

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மூன்று முறை சுடப்பட்ட அவா் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. இந்தப் படுகொலைக்கான நோக்கம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இது தொடா்பான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் சுகியோனோ, பெருவில் உள்ள தூதரக பணியாளா்கள் மற்றும் இந்தோனேசிய குடிமக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT