போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலியானவர்களில் பாதி பேர் வெளிநாட்டினர் ஆவர்.
செங்குத்தான மலைப்பாதையின் வளைவில் இறங்கி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கட்டடத்துடன் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயம் விபத்து குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விபத்தைத்தொடர்ந்து தலைநகரின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான கேரிஸ், அனைத்து ஃபுனிகுலர் கேபிள் கார்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சமீபத்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான துயரங்களில் ஒன்றாக இந்த விபத்தை அதிகாரிகள் அழைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.