பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, கடந்த செப்.4ஆம் தேதி தனது கூடாரத்தில் தூங்கியிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த பழுப்பு நிற கரடி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த கரடியை விரட்டி அவரை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் பாடகி பலூச்சை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காயங்களிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நேரத்தில் பாடகிக்கு முழு ஓய்வு தேவை என்பதால் அவரது அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த எலும்பு முறிவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.