இஸ்ரேலின் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 -ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலகளவில் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெருசலேமில் இன்று அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை நாங்கள் தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறோம்.
எந்தவிதத்தில் பயங்கரவாதம் நடந்தாலும் அதனை இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான, அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.