நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் AP
உலகம்

நேபாளத்தில் பதற்றம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நேபாள பிரதமர் அழைப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாள அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் சர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் நேபாள அரசின் ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் காத்மண்டுவில் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தைத் தொடங்கினர்.

அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கும் இளைஞர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரியும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர்.

சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை திங்கள்கிழமை இரவு நீக்கப்பட்ட போதிலும், பிரதமரைப் பதவி விலகக் கோரி செவ்வாய்க்கிழமையும் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

காத்மண்டுவில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்கள், சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சித் தலைவருமான சர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Prime Minister Sharma Oli has called for an all-party meeting amid the outbreak of violence against the Nepal government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

முளைப்புத்திறன் குறைவாக உள்ள விதைகளை விற்றால் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

பல்லடம் தொகுதியை இரண்டாக பிரிக்க தமாகா கோரிக்கை

SCROLL FOR NEXT