AP
உலகம்

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று காவல்துறை சந்தேகம்

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகிக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உயர் ரக துப்பாக்கியை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

மேலும், சார்லி கலந்துகொண்ட நிகழ்ச்சியின் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர்தான், அருகேயிருந்த ஒரு கட்டடத்தின் கூரையின் மேலிருந்து சார்லியை சுட்டுள்ளார் என்றும், பின்னர் தப்பியோடிய அவர் ஒரு கல்லூரி மாணவராக இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளத் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர், அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர்; டிரம்பின் பல கொள்கைகளுக்கு இவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோவில், நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்க முனைந்தார். அப்போது ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா சுடும் சப்தம் கேட்கிறது. அவ்வளவுதான், சார்லி சுருண்டு விழுகிறார். அந்த இடமே அமளியாகிறது. இவைதான் சம்பவத்தின்போது பதிவான விடியோவில் தெரிய வந்துள்ளது.

Rifle recovered in assassination of Trump ally Charlie Kirk, FBI says; suspect ‘college age’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

SCROLL FOR NEXT