கோப்புப்படம்  
உலகம்

ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!

ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அது முதலே அங்கு பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் அங்கு நசுக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் வெளியே செல்லத் தடை, கல்வி கற்க, பணிபுரிய கட்டுப்பாடுகள் என தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள புதிய கல்விச் சட்டத்தின்படி, தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், மேலும் 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பல்கலைக்கழக பாடப்பிரிவுகளில் உள்ள 18 பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. பாலின மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்டவை இந்த நீக்கப்பட்ட பாடங்களில் அடங்கும்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Taliban ban books written by women from Afghan universities

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT