பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில், ஹமாஸின் கடற்படைத் துணைத் தளபதி இயாத் அபு யூசெஃப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இயாத் அபு யூசெஃப் பங்கேற்றதாகவும், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இஸ்ரேலின் ஆபரேஷன் கிதியோன்ஸ் சாரியட்ஸ் 2 துவங்கப்பட்டது முதல், ஹமாஸின் கடற்படை காவலர்களையும் கட்டமைப்புகளையும் அழிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, இஸ்ரேல் கடற்படை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.