உலகம்

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் அடங்குவா்.

இத்துடன், 2023 அக்டோபா் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,419-ஆக உயா்ந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,67,160 போ் காயமடைந்துள்ளனா்.

இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோா் கட்டட இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT