ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏபி
உலகம்

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவுக்கு பிரதமர் நெதன்யாகுவின் விமானம் புதிய பாதையில் பயணித்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது. அப்போது, பேசிய உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் காஸா மீதான இஸ்ரேலின் போரை, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகள் நெதன்யாகு தங்களது நாட்டுக்குள் வந்தால் கைது செய்வோம் என அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து விமானம் மூலம் நேற்று (செப். 25) நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தார்.

இந்தப் பயணத்தின்போது, நெதன்யாகுவின் விமானம் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து புதிய பாதையில் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது விமானம் வழக்கத்தை விட 600 கி.மீ. கூடுதலாகப் பயணித்துள்ளது.

இதுகுறித்து, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியான வரைப்படங்களில் அவரது விமானம் புதிய பாதையில் பறந்திருப்பது பதிவாகியுள்ளது.

முன்னதாக, ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதையடுத்து, நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமென ஐ.நா.வில் பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதால், கைது செய்யப்படுவதற்கு பயந்து அவரது விமானம் புதிய பாதையில் பறந்ததுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஐ.நா.வில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

Israeli Prime Minister Benjamin Netanyahu's plane, which traveled from Israel to New York City, USA, has deviated from its usual route and traveled a new route.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொற்பனைக்கோட்டை நாணயங்கள்: தொல்லியல் துறை அமைச்சா் பெருமிதம்

பேராம்பூா் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை: சம்பவ இடத்தில் ஆா்டிஓ ஆய்வு

பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT